--- --:--:-- --

கொரொனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..!

11.1

ராஜஸ்தானில் கொரொனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரொனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி ஆகியவற்றை கொடுத்துவிட்டு தொற்று உறுதியாகும் பட்சத்தில் தலைமறைவாகி விடுவதால் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க ராஜஸ்தான் மாநில அரசு கொரொனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

 

பரிசோதனையின் போது ஆதார விபத்தை ஆர்டிபிசிஆர் செயலியில் லேப் டெக்னீசியன்கள் பதிவுசெய்யவும், ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கொரொனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் ஆய்வகங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon