--- --:--:-- --

விகாஸ் துபேயை போலீசார் கொல்லாவிட்டாலும் நானே கொன்று இருப்பேன் எனக்கூறும் மனைவி..!

23

சமீபத்தில் கான்பூர் தாதா போலீசாரால் என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. காவல் நிலையத்தில் புகுந்து அமைச்சரை கொன்றது, 8 போலீசாரை சுட்டுக் கொன்றது போன்ற வழக்குகள் அவன் மேல் உள்ளன.

 

கான்பூர் தாதா விகாஸ் துபேயை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். விகாஸ் துபே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவன் மனைவி அதுவே முதன் முறையாக தொலைக்காட்சிக்கு பேட்டி எடுத்துள்ளார்.

 

போலீஸ்காரர்கள் 8 பேரை சுட்டுக் கொன்றது, அந்த குடும்பங்களின் வாழ்க்கையை அழித்து விட்டதாகவும் இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதற்காகத் தானே விகாஸ் துபேயை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

ஒரு விபத்தில் விகாஸ் துபேயின் தலையில் அடிபட்டதால் மூளை பாதிக்கப்பட்டு கோபம் அதிகமானதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை நிறுத்தப்பட்டதால் கோபம் அதிகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon