--- --:--:-- --

சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு ரூ.100 அபராதம் கட்டிய ரஜினி..! அடுத்தடுத்து கிளம்பும் சர்ச்சை!!

568

இந்த கொரோனா காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பான சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச் சென்றதற்கு அவர் ரூ.100 அபராதம் செலுத்திய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

 

ரஜினி என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லைதான். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தன்னந்தனியாக தானே கார் ஓட்டிச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது எப்படி? இ-பாஸ் வாங்கித்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது. இதற்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்ற காரணம் கூறி அவர் லேட்டாக இ-பாஸ் வாங்கியதாக கூறியது பெரும் சர்ச்சையாகிக் கிடக்கிறது.

 

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு விதி மீறல் சம்பவத்தில் ரஜினி ஈடுபட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜுன் 26-ந்தேதி ரஜினி தனது காரில் கேளம்பாக்கத்திற்கு சென்றுள்ளார்.

 

அப்போது செம்மஞ்சேரி அருகே போலீசாரின் வாகன சோதனையில் ரஜினி சென்ற காரும் சிக்கியுள்ளது. காரில் இருந்த ரஜினி சீட் பெல்ட் போடாமல் சென்றதற்காக, காரில் இருப்பது ரஜினி என்று தெரிந்தும் போலீசார் ரூ.100 அபராதம் விதித்துள்ளனர். அந்த அபராதத்தை ரஜினி தரப்பில் நேற்று கட்டியுள்ளனர். இந்த அபராதம் கட்டிய ரசீது இப்போது வெளியாகியுள்ளது மேலும் பரபரப்பாகியுள்ளது.

https://www.kuttramkuttrame.com/2020/07/24/75-year-old-grandmother-travels-around-silambam-for-survival-due-to-poverty/

மேலும் படிக்க..

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon