சென்னை மண்ணடியில் டீ குடுக்கச் சென்ற சிறுவன் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுநரான ஜாகிர் உசேன் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் இருந்ததை அறிந்த அவரது 15 வயது மூத்த மகன் வீட்டில் தயாரித்த டீயை பிளாஸ்கில் கொண்டு சென்று அருகில் உள்ள பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் உரிமையாளர் சாகுல் ஹமீது வீட்டில் வந்து தருமாறு செல்போனில் கேட்டதால் ஏழாவது தளத்தில் இருந்த மூன்று பேருக்கும் டீயை கொடுத்துள்ளான்.
அப்போது கீழே இறங்கியபடி ஆறாவது மாடியில் லிஃப்ட் கட்ட தயார் செய்து வைத்திருந்த பள்ளத்திலிருந்து தரைதளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.