நடிகர் ரஜினிகாந்த் லம்போகினி காரை ஓட்டி வந்த புகைப்படம் வெளியான நிலையில் டுவிட்டரில் லயன் இன் லம்போகினி என ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளன.
பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி விலையுயர்ந்த லம்போகினி கார் ஓட்டிய படி வலம்வரும் புகைப்படம் வெளியானது.
இதனையடுத்து ரஜினிகாந்தின் இந்த புகைப்படத்தை டேக் செய்து லயன் இன் லம்போகினி என்று ரசிகர்கள் ஷேர் செய்தனர். இதனால் அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.