கேரள தங்க கடத்தலில் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்பா?

கேரள தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக என்‌ஐ‌ஏ அதிகாரிகள் கூறுகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் அமைச்சர் ஜலீலுக்கு நேரடியாக தலையீடு இருந்தது என்று மத்திய விசாரணை அமைப்பான என்‌ஐ‌ஏ கூறியுள்ளது.

 

இதனால் இவர் தற்போது நேரடி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பெற வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதனிடையே தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் இடைத் தரகர்கள் பைசல் அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்டார்.

 

அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பைசல் மலையாள சினிமா படங்களுக்கு பைனான்சியராக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளா தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஆகிய 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

இவர்கள் குறைந்தது 200 கிலோ தங்கத்தை துணை தூதரக முகவரியை கொண்டு கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் கொள்கின்றனர். இதனிடையே முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவ சங்கர ஐயர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது.


Leave a Reply