கர்நாடகாவில் முழு முடக்கம் பலன் அளிக்காததால் ஊரடங்கை அதிரடியாக நீக்கியுள்ள முதலமைச்சர் எடியூரப்பா !

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு நாளை முதல் நீக்கப்பட உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரொனா வைரஸை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கால் பலன் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

 

இந்தியாவில் கொரொனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா, டெல்லி ,தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. எனவே கொரொனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளும் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கே முடிவு என மற்ற மாநிலங்களும், தமிழ்நாடும் முழு ஊரடங்கு அமல் படுத்தி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் எந்த பலன் அளிக்காததால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் முழு முடக்கம் நீக்கப்பட உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களே கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பொருளாதார முக்கியம் என்பதால் முழு முடக்கம் ரத்து செய்யப்படுவதாகவும் பொருளாதாரம் மேம்பட மீண்டும் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply