படகில் பயணம் செய்து கொண்டே படம் பார்க்கும் மக்கள்..!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வாழும் மக்கள் வித்தியாசமான வகையில் திரைப்படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். அங்கு ஓடும் நதியின் படகுகளில் பயணித்தவாரே அவர்கள் திரைப்படத்தை கண்டு களிக்கின்றனர். இதற்காக அந்த ஆற்றின் ஓரத்தில் மெகா அளவிற்கு திரை சீலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

அதில் நேற்று ஃபிரான்சின் புகழ்பெற்ற நகைச்சுவை படமான லீகிரான் பெய்ன் திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. ஒரு மின்சார படகில் 6 பேர் பயணம் செய்தபடி இந்த திரைப்படத்தை கண்டு களித்தனர். மொத்தம் 38 மின்சார படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு இயக்கப்பட்டன. படகில் மிதந்தபடி சினிமா பார்க்கும் அனுபவம் பிரமிப்பை தருவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Leave a Reply