சட்டப்பேரவைத் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு இல்லையா!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலின்போது அரசு பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் நடைமுறை ஏற்கனவே உள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது கொரொனா அச்சம் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தபால் வழங்குவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

 

இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


Leave a Reply