சென்னை திரும்பிய கபிலேஷுக்கு உற்சாக வரவேற்பு..!
மலேசிய சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த 16 வயது தமிழக வீரர் கபிலேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய அவருக்கு ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கபிலேஷ், எதிர்காலத்தில் மோட்டோ ஜி.பி. போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது இலக்கு என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




