பொள்ளாச்சியில் பிரபல தனியார் கல்லூரிக்கு சீல்.போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக புகார் !!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

 

நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் பல்வேறு கட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்கள்,மாணவர்கள் குவிந்துள்ளனர்.

போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்,முகக்கவசம் அணியாமலும் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை நேரில் சென்று எச்சரிக்கை விடுத்தனர்.இருந்தும் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்,முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட நிலையில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று கல்லூரியின் முன்பக்க கதவை மூடி ” சீல் ” வைத்தனர்.

 

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால் நேரில் சென்று கல்லூரியின் முன்பக்க கதவை மூடி ” சீல் ” வைத்ததாகவும்,ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபரின் பொள்ளாச்சி கல்லூரிக்கு ” சீல் ” வைக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply