எகிப்து நாட்டில் இரும்பு பொருட்களை பயன்படுத்தி செய்யப்பட்ட பூனை சிலை..!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் வீணான இரும்பு பொருட்களை உபயோகப்படுத்தி பல்வேறு கலைப் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வீணாகி கிடக்கும் 3 ஆயிரம் இரும்பு பொருட்களைப் பயன்படுத்தி 6 அடி உயரம் பூனை சிலையை உருவாக்கியுள்ளனர். அது பார்ப்பதற்கு நிஜ பூனை சிலையைப் போலவே உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

 

மேலும் பூந்தொட்டி அமரும் மேசைகள், தொங்கும் விளக்குகள், குடிநீர் குழாய் என பல்வேறு படைப்புகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து உபயோகமாக செய்ய முடியும் என்பதை விளக்கவே இவ்வாறு செய்வதாக அந்த கலைஞர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply