திரையரங்கில் வாசம் வீச செய்யும் தனது தொழில் நுட்பத்தை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் திருடி விட்டதாக குற்றம் சாட்டியுள்ள நடிகரும், தயாரிப்பாளருமான பாபுகணேஷ் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2000மாவது ஆண்டில் வெளியான நாகலிங்கம், 2012 ஆம் ஆண்டில் வெளியான நானே வருவேன் ஆகிய திரைப்படங்களை இயக்கி நடித்து தயாரித்தவர் பாபு கணேஷ்.
அந்த திரைப்படத்தில் காட்சிகளுக்கு ஏற்ப திரையரங்குகளில் நறுமணம் வீசும் முறை அறிமுகப் படுத்தியதாகவும் தற்போது காட்டுப்புறா என்ற திரைப்படத்தையும் இதே முறையில் தயாரித்து வருவதாகவும் பாபு கணேஷ் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இயக்கி வரும் லே மஸ்க் திரைப்படத்தின் இதே உத்தியை பயன்படுத்தப்படுவதாகவும் உலகிலேயே முதன்முறையாக தான் தான் பயன்படுத்துவதாக ஏ ஆர் ரகுமான் கூறி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து விளக்கம் கேட்கம ஏஆர் ரஹ்மானை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியாததால் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், இசையமைப்பாளர் சங்கம் வாயிலாக நோட்டீஸ் கடிதம் அனுப்பியும் பதில் இல்லை என்று பாபு கணேஷ் கூறியுள்ளார். எனவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.