தூத்துக்குடி விடுதியில் சூதாட்டம் போலீசார் சுற்றிவளைப்பு – 4பேர் கைது, ரூ.34 ஆயிரம் பறிமுதல்!!

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் மார்க்கெட் அருகே, தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

 

இதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய சோதனையில் அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த தூத்துக்குடி சுந்தர் நகரைச் சேர்ந்த அழகுராஜா (70), தூத்துக்குடி வண்ணார் 1வது தெரு, சண்முகபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (47), தூத்துக்குடி பாளை ரோட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (53), டூவிபுரத்தைச் சேர்ந்த தனசேகர் (53) ஆகிய 4பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.33,955 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Leave a Reply