--- --:--:-- --

பெட்ரோல் , டீசல் விலையில் 4 நாட்களாக எவ்வித மாற்றம் இல்லை..!

5

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இன்று பெட்ரோல் விலை நேற்றிலிருந்து மாற்றமில்லாமல் 83 ரூபாய் 63 காசுகளாக விற்கப்படுகிறது. இதுபோல் டீசல் விலையை மாற்றமின்றி லிட்டருக்கு 77 ரூபாய் 72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

கடந்த 4 நாட்களாக எவ்வித மாற்றமுமின்றி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சற்று சிரமத்தில் இருந்து பெருமூச்சு விட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon