--- --:--:-- --

கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி..!

11

தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள கீழடி காரைக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இறந்தவர்களின் உடலை டிராக்டரை ஏற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சோமசுந்தரம் என்பவரின் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போதுமுதலில் இரண்டு பேர் இறங்கியுள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அடுத்த இரண்டு பேர் இறங்கி சென்று பார்க்கலாம் என உள்ளே இறங்கிய போது அவர்கள் நால்வரும் பலியாகியுள்ளனர்.

 

அந்த ஈடு குறுகலான சாலையில் அமைந்துள்ளதால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாமல் செல்ல முடியாததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon