முகக்கவசம் அணிந்து வந்தால் 20 ரூபாய் வெங்காயத்தை 10 ரூபாய்க்கு விற்கும் வியாபாரி ..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு வெங்காயத்தை பாதி விலைக்கு விற்பனை செய்து வியாபாரி ஒருவர் அசத்தி வருகிறார். பஜார் வீதியில் காய்கறி கடை அமைத்துள்ள நவாஸ் என்ற வியாபாரி கொரொனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியுமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறார்.
இதை ஊக்குவிக்கும் விதமாக முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு 20 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ வெங்காயத்தை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தி வருகிறார்.






