--- --:--:-- --

சீன ஊடகங்கள் ஏன் மோடியைப் புகழ்கின்றன? ராகுல் காந்தி கேள்வி

2

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை நீடிக்கும் நிலையில் சீன ஊடகங்கள் ஏன் மோடியைப் புகழ்கின்றன என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்சில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி வெளிவந்திருக்கும் செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி சீனா நமது வீரர்களை கொன்றது.

 

சீனா நமது நிலத்தை எடுத்துக் கொண்டது ஆனால் சீனா ஏன் மோடியை புகழ்கிறது என வினவியுள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி நிலைமையை விவரித்தார்.

 

அப்போது இந்திய எல்லையில் யாரும் நுழையவும் இல்லை. இந்திய நிலங்களை யாரும் கைப்பற்றவும் இல்லை என மோடி கூறியிருந்தார். அதனை சுட்டிக்காட்டியுள்ள குளோபல் டைம்ஸ் சீனாவுடன் மேற்கொண்டு பிரச்சனை செய்ய முடியாது என்பதால் மோதலை மோடி குறைத்து பேசியுள்ளார் என கூறியுள்ளது.

 

இதுவே பாகிஸ்தானாக இருந்தால் இந்தியாவின் எதிர்வினைகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும், சீனா என்பதால் நிலைமையை அமைதிக்கு கொண்டுவர மோடி இவ்வாறு கூறியுள்ளார் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களை சமரசம் செய்யவே பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon