--- --:--:-- --

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழுமுடக்கம்..! என்னென்ன இயங்கும்?

1

கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையைப் போல மதுரையிலும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் போல் மதுரையிலும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் மட்டும் முழு முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் முழு முடக்கம் ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

 

முழு முடக்க காலத்தில் காய்கறிக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோட்டல்கள் செயல்படலாம். ஆனால் பாசங்களின் மட்டுமே உணவு வழங்க வேண்டும். தேனீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருப்போர் அலுவலகம் செல்ல அனுமதி இல்லை.

 

அம்மா உணவகங்கள், சமுதாயக் கூடங்கள் வழக்கம்போல இயங்கும். வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எவ்வித தளர்வுகளும் இல்லாமல் முழு முடக்கம் அமலில் இருக்கும். பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் 2 மணி வரை மட்டுமே ரேஷன் கடைகள் இயங்கும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது.

 

ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் இந்த வாகனங்களை பயன்படுத்தலாம். ரயில்வே நிலையம், விமான நிலையத்திலிருந்து இ பாஸ் இருந்தால் வாகனங்கள் இயங்கலாம். மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவெளியே செல்லும்போது வாகனங்களை பயன்படுத்த கூடாது.

 

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே நடந்து சென்று வாங்க வேண்டும். இதனிடையே வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு முழு முடக்கத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் ஜூன் 30 வரை அந்த மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமலாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon