--- --:--:-- --

கோவாவில் கொரொனாவுக்கு 85 வயது மூதாட்டி பலி!

11

கோவாவில் கொரொனா தொற்றுக்கு முதல் நபர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்ட 85 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் அவருக்கு ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம் ஏற்கனவே இருந்தது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே மொர்லம் பகுதியை சேர்ந்த அந்த மூதாட்டியின் மறைவு துரதிருஷ்டவசமானது என்றும் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விசுவசித்சிங் ராணி குறிப்பிட்டுள்ளார். கோவாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் படுகிறது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

ஞாயிறு நிலவரப்படி கோவாவில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 818 ஆக உள்ளது. அவர்கள் 683 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon