--- --:--:-- --

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரொனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு!

10

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்று நல்ல முடிவு வந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

திமுக தலைவர் ஸ்டாலின் கொடுக்கும் சான்றிதழுக்காக முதல்வர் பணியாற்றவில்லை என்றாலும் மக்களின் சேவைக்காக மட்டுமே சேவையாற்றி வருகிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரொனா தாக்கத்தை அறிந்து மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் ஸ்டாலின் சான்றிதழ் கொடுப்பதற்காக முதல்வர் பணியாற்றவில்லை என்று தெரிவித்த செல்லூர் ராஜு மக்களின் தேவைக்காக முதல்வர் பணியாற்றி வருவதாக கூறினார்.

 

ஸ்டாலின் ஆரோக்கியமான விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்றும், முதல்வரின் நல்ல பணியை குறை கூறுகிறார் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் தனது தரத்தை தானே குறைத்துக் கொள்கிறார் என அர்த்தம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon