--- --:--:-- --

கேரளாவில் யானைக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் போல வெடிகுண்டு வெடித்ததில் பசுவிற்கு வாய் சிதைந்தது!

12

வேலூர் அருகே வன விலங்குவிலங்குகளை வேட்டையாட புல்லில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் வாய் சிதறி உயிருக்கு போராடி வருகிறது. அணைக்கட்டு அடுத்த கடலைகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணையா வழக்கம்போல தனது பசு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர்.

 

மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது ஒரு பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்த வெள்ளத்தில் சதை தொங்கியது. போலீசார் நடத்திய விசாரணையில் அங்கே கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் சிதறியது தெரியவந்துள்ளது.

 

வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்கா எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை வேட்டை கும்பல் வைப்பதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon