--- --:--:-- --

டெல்லியில் ஒரு நாள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 3 மடங்காக உயர்வு..!

5

டெல்லியில் கொரொனா பரிசோதனை எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சீனாவுக்கு எதிராக எல்லையிலும், கொரோனா வைரசுக்கு எதிராக உள்நாட்டிலும் என இரண்டு போர்களை எதிர்கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

 

டெல்லியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 18 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் கொரொனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அதில் 12 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 

டெல்லி அரசு ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்சிஜன் பரிசோதனை மீட்டரை வழங்க உள்ளது என தெரிவித்த கெஜ்ரிவால் நோயாளிகள் ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டதை கண்டால் உடனடியாக உதவி எண்களை அழைக்கலாம் என கூறினார். தற்போது 7,000 படுக்கைகள் காலியாக இருப்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon