--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரொனா பரவாது..!

3

கொரோனா பாதித்த தாய்மார்கள் தயக்கம் இன்றி தாய்ப்பால் கொடுக்கலாம் என்று தாய்ப்பால் மூலம் கொரொனா பரவாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பாதித்த தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா கூடாதா என்று சந்தேகம் உலகளாவிய ஒன்றாக இருந்து வந்தது.

 

தற்போது தாய்மார்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று இருந்தாலும் அவர்கள் தாய் பால் தந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாது என தெரியவந்துள்ளது. கொரொனா பாதித்த தாய்மார்கள் தயக்கம் இன்றி தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

கொரொனா நோய் தொற்றுக்கான தாயின் தாய்பாலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும். தாய்ப்பாலில் ஆர்‌என்‌ஏ மட்டும் கொஞ்சம் உள்ளதால் நோய் தொற்று தாயிடமிருந்து குழந்தைக்கு பரவ வாய்ப்புள்ளதாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இருப்பினும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் பாலூட்டும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கொரொனா நோய் தொற்று உள்ள தாய்மார்கள் பாலூட்டுவதற்கு குழந்தையை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்னரும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பெண்கள் பாலூட்டும் போது முக கவசத்தை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கிருமி நாசினி பயன்படுத்தி சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon