மேட்டுப்பாளையம் அருகே படுகாயங்களுடன் சிறுத்தை மீட்கப்பட்ட சம்பவம்.தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு கண்காணித்து வருவதாக வனத்துறை தகவல் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோத்தேபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலையை ஒட்டி போடப்பட்ட முள்கம்பி வேலியில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிறுத்தையை மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கில் வைத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில் குமார் கூறுகையில் முள்கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தைக்கு மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,தையல் போடப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.வனத்துறை மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,உயரதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,சிகிச்சையில் இருப்பதால் செய்தியாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார்.






