--- --:--:-- --

காவலரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

15

மது கடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய காவலர் மற்றும் ஊர்க்காவல் படை காவலரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை கிராமத்தில் 2 டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் மதுப் பிரியர்கள் மது வாங்க வருவதால் நேற்று இரண்டு கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

 

இந் நிலையில் சோழவரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நீலமேகம் ஊர்க்காவல் படை வீரர் கணேசன் ஆகியோருடன் அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது மது குடித்துக் கொண்டிருந்த அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு காவலர்கள் இருவரையும் அடித்து தள்ளியதில் காவலர் நீலமேகம் கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார்.

 

இதையடுத்து காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் காவலரை தாக்கிய தகவலறிந்து பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சோழவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon