--- --:--:-- --

ஆசிய இளைஞரை வம்புக்கு இழுத்த அமெரிக்க இளைஞர்!

5

அமெரிக்காவில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஆசிய இளைஞரை வம்புக்கிழுத்து அமெரிக்கர் நாக்-அவுட் முறையில் அடித்து வீழ்த்தப்பட்டார். கலிபபோர்னியாவில் உள்ள சான்டியாகோ நகரில் சாலையோரம் ஆசிய இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கு வந்த அமெரிக்கரான டாசர் என்பவர் ஆசிய இளைஞரிடம் வம்பு இழுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விலகிச் செல்ல முயன்ற ஆசிய இளைஞரை டாசர் தொடர்ந்து தாக்க முயன்றதால் ஒருகட்டத்தில் இருவரும் மோதலுக்கு தயாராகினர்.

 

அப்போது ஆசிய இளைஞர் நாக்-அவுட் முறையில் தாக்கினார். இதனால் நிலைகுலைந்து அடியற்ற மரம் போல விழுந்தார். இருவரின் சண்டை குறித்து தகவலறிந்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆசிய இளைஞர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon