பள்ளி பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும்!
கல்வியாண்டு குறைவதால் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து அறிக்கையை வல்லுநர் குழு விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதும முடக்கத்தால் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் ஒரு மாதம் பள்ளிகள் இயங்கவில்லை.
2020 – 2021 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளை எப்போது திறக்கும் முடியும் என்பதை முடிவு செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளைத் திறக்கலாம் என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்து இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொற்று எண்ணிக்கை உச்சம் பெறும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைக்கலாமா என்பதை பள்ளிக்கல்வி வல்லுநர் குழு ஆலோசித்து வருகிறது.
கல்வியாண்டு முடங்கியுள்ள நிலையில் தொழில்நுட்ப வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பள்ளிகள் திறப்பு குறித்தும் இக் குழு பரிந்துரைகளை வழங்க உள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான ஆணைக்குழுவில் பள்ளிக் கல்வி இயக்குநர்கள் யுனிசெஃப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.






