--- --:--:-- --

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான திட்டம் என்ன?

3.1

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான திட்டம் குறித்து மத்திய அரசும் தமிழகத்தில் விமானங்களை தரை இறக்க அனுமதிப்பது குறித்து தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விமானப் போக்குவரத்து அமைதி வழங்கப்படாதது எதிர்த்து திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

மனுவில் மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான திட்டம் உள்ளிட்ட அம்சங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 

அதேபோல் தமிழகத்தில் விமானங்களை தரை இறக்க அனுமதிப்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon