--- --:--:-- --

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் !!!

2.1

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 கி.மீ தொலைவில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி ரூ.40.70 கோடி மதிப்பில் ரேஸ்கோர்ஸ் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விளையாட பூங்காக்கள், திறந்தவெளி திரையரங்கம், நடைபாதை சிற்றுண்டி கடைகள், சிந்தடிக் மைதானம், அதிநவீன கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், இலவச wifi, வாகனங்கள் நிறுத்துமிடம், போக்குவரத்து வசதி, நிழற் குடைகள், அதிநவீன கண்காணிப்பு கேமரா போன்ற வர உள்ளது, தமிழகம் முழுவதும் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றில் முதலமைச்சர் சிறப்பான முறையில் செய்து வருகிறார்.

இதனால் கோவை மாவட்டம் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்பொழுது எட்டியுள்ளது. கோவையில் இதற்கு முன்பிருந்த அரசு இது போன்ற எவ்வித நலத்திட்டங்களையும் செய்ததில்லை. தற்பொழுது இது போன்ற பல வசதிகள் செய்து வருவது பொறுக்க முடியாமல் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவையில் வைரஸ் தொற்று மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ – க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon