--- --:--:-- --

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை விலங்குகளை விட மோசமாக அரசுகள் கையாள்கிறது!

4

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை விலங்குகளை விட மோசமாக அரசுகள் கையாள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் கௌரவமாக நடத்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.

 

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. அப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அரசுகள் கையாளும் விதம் மிகவும் வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சில இடங்களில் உடல்கள் குப்பைத் தொட்டியிலிருந்தெல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

பார்த்தாலே மிகவும் வேதனையாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நோயாளிகளை கையாளுவது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து விரிவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon