கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றிய மூன்று பேர்!
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் அருகே கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மருத்துவம் பார்த்த மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொள்ளும்போது காந்தி, பார்த்திபன், வரதராஜன் என்ற மூன்று பேர் உரிய மருத்துவ படிப்பு இன்றி ஆங்கில மருத்துவம் பார்த்ததும் அனுமதியின்றி கிளினிக் நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் உபகரணங்கள் மருந்துகளை பறிமுதல் செய்து மருத்துவமனைகளுக்கு சீல் வைத்தனர்.






