--- --:--:-- --

கேஸ் சிலிண்டர்களை வாட்ஸ்-ஆப் மூலம் பதிவு செய்யலாம்!

12

பாரத் பெட்ரோலிய நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாட்ஸ் அப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யவும் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தவும் பாரத் பெட்ரோலியம் சார்பில் பிரத்தியேக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணில் இருந்து 1800 224344 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி புதிய சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பாரத் நிறுவனத்தின் வெப்லிங் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.

 

வீடு வீடாக சமையல் சிலிண்டர் வினியோகிக்கும் போது வழிமுறைகளை பின்பற்றி வினியோகம் செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon