--- --:--:-- --

டிக்டாக்கிற்கு மாற்றாக மக்களிடம் பிரபலமாகி வரும் சிங்காரி ஆப்!

2

சீன செயலியான டிக் டாக் செயலிக்கு மாற்றாக புதிய செயலி ஒன்று அறிமுகம் ஆகி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

 

பெங்களூரை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் டிக் டாக்கிற்கு போட்டியாக உருவாக்கியிருக்கும் சிங்காரி என்ற செயலி இடம் பெற்றுள்ளதால் இந்த வீடியோ பதிவுகள் சிங்காரி செயலியின் மூலம் வீடியோவை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்வது மட்டுமின்றி நண்பர்களுடன் மெசேஜ் அனுப்பிக்கும் செய்யும் வசதியும் உள்ளது.

 

மேலும் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் செய்திகள் நகைச்சுவை பதிவுகள் போன்றவற்றையும் காணும் வகையில் வசதிகள் உள்ளன. தற்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என பத்து மொழிகளில் இதை பயன்படுத்தலாம். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.

 

டிக்டாக்கை விட கூடுதலான வசதிகள் இருப்பதும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்பதும் சிங்காரி செயலி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக கூடுதல் சிறப்பாக அமைந்துவிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon