--- --:--:-- --

சசிகலா விடுதையாகும் தேதியை துல்லியமாக தெரிவிக்க முடியாது!

1

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து கர்நாடக சிறைத்துறை பதிலளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 10 நான்காண்டு சிறையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் முடிய இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து பெங்களூரை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை தற்போது பதில் அளித்துள்ளது.

 

குற்றவாளிகளின் விடுதலை பல்வேறு விதிகளுக்கு உட்பட்டது என்றும் அபராத தொகையை செலுத்துவது அடிப்படையிலும் விடுதலை தேதி மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா விடுதலை ஆகும் தேதியைத் துல்லியமாகச் தெரிவிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon