தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2019 – 2020 ஆம் ஆண்டுக்கான நிலுவை கட்டணம், 2020 – 2021 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்துமாறு பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது எனக் கூறியுள்ள தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் கல்வி கட்டணம் மட்டுமல்ல இணையவழி வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என எச்சரிக்கிறார்.






