--- --:--:-- --

இயக்குநரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது

14

சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் மதங்களை இழிவு படுத்தும் வகையிலும் காட்சிகளைச் சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

காட்மென் என்ற இணையதள தொடரின் இயக்குநரின் மனைவி குறித்து ஆபாச படங்கள் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சமூக ஊடக பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

 

சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த 33 வயது இளைஞர் சண்முக சுந்தரம் என்பவர் தான் இதற்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிடிபட்ட சண்முகசுந்தர தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon