--- --:--:-- --

ATM இயந்திரத்தை தொடாமலேயே கியூ ஆர் கோட் மூலம் பணம் எடுக்கும் வசதி!

12

கொரொனா பரவலைத் தடுக்க ஏடிஎம் எந்திரத்தை தொடாமலேயே கியூ ஆர் கோட் மூலம் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட எம்பே- பேமண்ட் சிஸ்டம் என்ற நிறுவனம் பிரபல மாஸ்டர் கார்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கார்டு ஏடிஎம் சேவையை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏ‌டி‌எம்கள் தயார் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள வங்கியில் நெட் பேங்கிங் செயலியை திறந்து கார்டு லெஸ் ஏடிஎம் வசதி இருக்கும் இயந்திரத்தில் காட்டும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்த பின் எடுக்க வேண்டிய தொகையை செயலிலேயே பதிவு செய்தால் போதும் பணம் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

 

இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் என நம்பப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon