புதுச்சேரியில் 82 வயது முதியவர் கொரொனாவால் உயிரிழப்பு!
புதுச்சேரியில் 82 வயது முதியவர் ஒருவர் கொரொனாவுக்கு பலியாகியுள்ளார். புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் இதுவரை 68 பேர் குணம் பெற்று வீடு திரும்பிய இருப்பதாகவும் 88 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை தற்காலிக முகவரி கொடுத்து இருந்த நோயாளி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரொனாவுக்கு முதல் பலியாகி இருப்பதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குறிப்பிட்டுள்ளார்.






