--- --:--:-- --

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்!

12

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்து சென்ற 8 வயது சிறுவனை வெறிபிடித்த நாய் ஒன்று கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ராசிபுரம் பகுதியில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த 8 வயது சிறுவனை அதே தெருவில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று கையில் கடித்துள்ளது.

 

நாய் அந்த சிறுவனை கடிப்பதை பார்த்த பெண் ஒருவர் அந்த நாயை துரத்தியுள்ளார். மேலும் காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் நாய் கடிக்கான சிகிச்சைகள் மருத்துவர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

 

ராசிபுரத்தில் வெறிநாய் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. மேலும் கூட்டம் கூட்டமாக சில நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிக அளவில் இருந்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon