--- --:--:-- --

காரின் பின்னால் விளையாடி கொண்டிருந்த குழந்தையை கவனிக்காமல் ரிவர்ஸ் எடுத்த போது குழந்தை பலி!

2

டெல்லியில் மெர்சரிஸ் எஸ்யூவி ரக காரை பின்னோக்கி நகர்த்திய போது பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த 10 மாத பெண் குழந்தை கார் சக்கரத்தில் சிக்கி பலியானது. மேற்கு டெல்லியில் கிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருபவரின் பிறந்து 10 மாதங்களே ஆன பெண் குழந்தை அங்குள்ள கார் பார்க்கிங் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

 

அதனை கவனிக்காமல் அகிலேஷ் என்பவர் மெர்சரிஸ் எஸ்யூவி காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது கார் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து காரை ஓட்டியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon