--- --:--:-- --

சென்னையில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்தார்!

5

சென்னை அடையாறு கூவம் ஆற்றின் பாலத்தின் மீது நின்றபடி செல்பி எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கொளத்தூரை சேர்ந்த சதீஷ் என்பவர் நேற்று மாலை ஆறரை மணி அளவில் அடையாறில் இருந்து திரு.வி.க பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

 

அப்போது அடையாறு கூவம் ஆற்றின் அழகை பார்த்து ரசித்து அவர் தன்னிடமிருந்த ஐபோன் மூலம் செல்பி எடுத்துள்ளார். இந்நிலையில் ஐபோன் நழுவிக் கீழே விழுந்த போது அதை பிடிக்க முயற்சித்த சதீஷ் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

 

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஏணி மூலம் சதீஷை ஆற்றிலிருந்து பத்திரமாக மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon