தாய் தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு..! வறுமையில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகள்..!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தாய் தந்தையை அடுத்தடுத்து இறந்த சோகத்தில் இருக்கும் நான்கு பிள்ளைகள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். சேதமடைந்த கீற்றுக் கொட்டகை கொள்கையில் மழை என எது வந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கும் நான்கு பிள்ளைகள் வேதாரண்யத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்த காளியப்பன் உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். அவரது மனைவி தனது நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார்.
இதனால் தந்தையும், தாயும் இல்லாமல் நான்கு பிள்ளைகளும் நிர்கதியாக நிற்கின்றனர். உயிர் இழந்த தாயின் 16ஆம் நாள் காரியத்தை கூட செய்ய முடியாமல் தவிக்கும் இந்த பிள்ளைகள் யாராவது தங்களுக்கு உதவுவார்கள் என என்ற எண்ணத்தில் காத்திருக்கின்றனர் இவர்கள்.






