--- --:--:-- --

வெடிபொருள் அன்னாசி பழத்தில் இல்லை… தேங்காயில் வைக்கப்பட்டதே யானை உயிரிழப்புக்கு காரணம்!

13

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கருவுற்ற காட்டு யானையை மரணத்துக்குத் தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெடிமருந்துகள் கலந்த அன்னாசிப் பழத்தை உணவாகக் கொடுத்ததால் வெடித்து சிதறியதில் படுகாயம் ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

 

இந்த சம்பவத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளி வில்சன் என்பவரை கைது செய்துள்ள வனத்துறையினர் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் கூறப்பட்டது போல அன்னாசிப்பழத்தில் வெடிமருந்துக் வைக்கப்படவில்லை என்றும் தேங்காயில் வெடி பொருளை வைத்ததே துயர சம்பவத்திற்கு காரணம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon