--- --:--:-- --

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மரக்கன்றுகளை நடவு செய்தார்!

1.1

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் , இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்டு உள்ள கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுங்காடுகள் வளர்ப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பார்வையிட்டு மரக்கன்றுகளை நடவு செய்தார் .

 

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :இயற்கை வளங்களை பாதுகாத்து பசுமையான சூழலை உருவாக்குவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும் ஜுன் 5 – ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளில் 1000 குறுங்காடுகள் அமைத்திட திட்டமிடப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன .

 

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்தும் , குப்பைக்கழிவுகள் சேர்ந்தும் பயன்பாடற்ற நிலையிலுள்ள இடங்களை தேர்வு செய்து சுத்தப்படுத்தி , அதில் வேம்பு , புளி , வாகை , நாட்டு பூவரசு , கொய்யா , சீதாப்பழம் , நெல்லி , நாட்டுபாதாம் , ஆவி நாவல் , புங்கன் போன்ற பல்வேறு பயன்தரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன . இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் அமைத்து 1 முதல் 2 வருட பருவ மரக்கன்றுகளாக வளரும் வரை நேர்த்தியாக பராமரிக்கப்படுகின்றன .

இவ்வாறு பராமரிக்கப்படும் இம்மரக்கன்றுகள் அருகிலுள்ள ஊராட்சிகளில் ஏற்படுத்தப்படும் குறுங்காடுகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன . இதன் மூலம் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது . மேலும் வருங்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பசுமையான மாவட்டமாக உருவாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் .

 

இந்த ஆய்வில் , மாவட்ட ஆட்சித் தலைவர் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ரூ .3.23 இலட்சம் மதிப்பில் குறுங்காடுகள் வளர்க்கும் பணிகளை பார்வையிட்டு பயன்தரும் மரக்கன்றுகளை நடவு செய்தார் . தொடர்ந்து , பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் , வேந்தோணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் வளர்ப்பு பராமரிப்பு பணிகளையும் , உரப்புளி ஊராட்சியில் குறுங்காடுகள் வளர்க்கும் பணிகளையும் பார்வையிட்டார் .

 

இந்த நிகழ்வுகளின்போது , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர் , கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் ( ஊரக வளர்ச்சி முகமை ) மா.பிரதீப்குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஜி.சிவராணி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆ.ராஜேந்திரன்,கே.சந்திரமோகன், எஸ்.செந்தாமரைச்செல்வி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon