--- --:--:-- --

சீனாவில் மீண்டும் வரும் கொரொனா வைரஸ்..!

1

சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீன சுகாதார ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் ஷாங்காய் மாகாணத்திலும், ஒருவர் சிச்சுவான் மாகாணத்தில் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்பிய ஆயிரத்து 778 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 1,077 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருப்பதாகவும் 61 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

சீனாவில் இதுவரை 83 ஆயிரத்து 27 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon