சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு!
சென்னையில் கொரொனா வைரஸை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மூன்று மண்டலங்களின் பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் கண்காணித்து வருகிறார். அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், மண்டலங்களுக்கு அமைச்சர் கே வி அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜர் திருவொற்றியூர், மணலி, திருவிக நகர் மண்டலங்களுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் கொரொனா தடுப்பு பணிகளை எம்ஆர் விஜயபாஸ்கர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






