--- --:--:-- --

பாம்புக்கும், உடும்பும் போட்டுக்கொண்ட சண்டை! யாரின் போராட்டம் வெற்றியடைந்தது!

6

தென்னாபிரிக்காவில் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே போராடிய பாம்பு உடும்பு சண்டை வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. மாலா மாலா என்ற வன பகுதியில் சில சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று சிறிய உடம்பினை பிடித்து இருந்ததை கண்டனர்.

 

ஆனால் உடும்பும் தனது பங்கிற்கு பாம்பினை கடித்துக் கொண்டிருந்தது.ஒரு கட்டத்தில் பாம்பின் பிடி உடம்பின் கழுத்து பகுதியில் இருந்தாலும் தன்னை காப்பாற்றிக்கொள்ள உடும்பு மிக பலமாக போராடியது. இரண்டும் ஒன்றையொன்று கொன்றுவிடும் தீர்மானத்துடன் சண்டையிட்டன.

 

இறுதியில் குரல்வளை நெரிக்கப்பட்டு சுயநினைவை இழந்த உடும்பை முழுமையாக விழுங்கி தனது பசியை தீர்த்துக் கொண்டது. பாம்பின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon