டிக் டாக் பயனாளர்களை கவர புதிய தலைப்புகளில் சேலஞ்!
தனது பயனர்களை கவரும் விதமாக டிக் டாக் செயலி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. டிக்டாக்கில் பயனாளர்களை கவரும் விதமாக பல்வேறு விதமான சேலஞ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ் மூவிஸ் கண்டுபிடிங்க என்ஜாய் பண்ணுங்க என்ற தலைப்பில் படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வேறு வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த வீடியோ பதிவுகள் டிக்டாக்கில் ட்ரெண்டிங் ஆகி உள்ளன. கொரொனாவின் தாக்கம் அதிகமுள்ள நேரத்தில் அன்பு, நம்பிக்கை நேர்மறை எண்ணங்கள் பருக கேண்டில் ஆப் போப் என்ற தலைப்பில் நடிகை மாதுரி தீட்சித்தின் முன்னெடுப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி பதிவிடும் டிக்டாக்வீடியோகளும் அதிகம் பதிவிடப்படுகிறது.
இதேபோன்று பைபிள் யூனிகான் மாஸ்க் போன்ற தலைப்பில் பல்வேறு விதமான செய்திகளை உருவாக்கி பயனாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.






