--- --:--:-- --

கோவிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்த மானூர் காவல்துறையினர்…!

15

திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமையன்பட்டி ராஜகோபாலபுரம் பகுதியிலுள்ள தங்கம்மன் கோவிலில் கடந்த 19.05.2020 தேதி அன்று, உண்டியலை உடைத்து பணம் மற்றும் கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை (மதிப்பு-24,000) மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

 

இதுகுறித்து கோவில் பூசாரி நெல்லையப்பன் (52) அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர், இந்நிலையில் விசாரணையில் கோவிலில் உள்ள பொருட்களை திருடியது ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரநயினார் (28) என்பது தெரியவந்தது, இதனையடுத்து உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் சங்கரநயினார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 3 குத்து விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon